பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி ஆணையர் தகவல்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 to 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். ஆனால், மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் 1-12-ஆம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…