வேளாண்மை பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை-நாளை முதல் விண்ணப்பம்..!

Default Image

இந்த ஆண்டிற்கான வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டுப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான்கு உறுப்புக் கல்வி நிலையங்களிலும், மூன்று அரசு இணைப்பு கல்வி நிலையங்களிலும் மற்றும் பத்து தனியார் இணைப்பு கல்வி நிலையங்களிலும் பயிற்றுவிக்கப்படுகின்றது. வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான 2021-2022 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை 01.10.2021 அன்று தொடங்கப்படும் என்று முனைவர் மா.கல்யாணசுந்தரம், முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) தெரிவித்தார்.

நடப்புக் கல்வி ஆண்டில் (2021-2022) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வேளாண் பொறியியல் பட்டயப்படிப்பு உறுப்புக் கல்வி நிலையமான குமுளூரில் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. மேலும் தமிழ்நாடு தோட்டக்கலை துறையினால் தளி, மாதவரம் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஆகியவற்றில் நடத்தப்பட்டு வந்த தோட்டக்கலை பட்டயப்படிப்பு இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அரசு இணைப்பு கல்வி நிலையங்களாக அங்கீகாரம் பெற்று மாணவர் சேர்க்கை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் நடப்பு ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://tnau.ac.in/diplomaadmission) உள்ள விண்ணப்பத்தினை இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் விண்ணப்ப படிவம், விண்ணப்பக் கட்டணம் மற்றும் சான்றிதழ்களை பல்கலைக்கழகத்திற்கு தபாலில் அனுப்பத் தேவை இல்லை.

மாணவர் சேர்க்கை குறித்த விபரங்களை அறிந்துகொள்ள (https://tnau.ac.in/diplomaadmission) இணையதளத்தில் உள்ள தகவல் கையேடு உதவிகரமாக இருக்கும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 0422-6611322, 0422-6611328, 0422-6611345. 0422-6611346 ஆகிய தொலைபேசி உதவிச்சேவை எண்களில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்