குடிகாரர்கள் கள்ளச்சாராயம் குடித்து சாவார்கள்: திண்டுக்கல் சீனிவாசன் !!!
அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் அளித்த பேட்டியில், அரசாங்கம் ஒயின்ஷாப்புகளை நடத்தவில்லையென்றால், கள்ளசாராயம் குடித்து இறந்துபோவார்கள் குடிகாரர்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “இப்போது அனைவரும் ஒயின்ஷாப்பை மூட வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், அப்படி மூடினால் குடிகாரர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்துபோவார்கள்.
குடிகாரர்கள் அவர்களாகவேதான் திருந்த வேண்டும் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு தற்போது சர்ச்சை கிளப்பியுள்ளது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு