5000 மரக்கன்றுகள் எங்கே.?! வெறும் தகரம் தான் இருக்கிறது.! விசாரணையில் சிக்கும் திண்டுக்கல் சீனிவாசன்.?
முன்னாள் அதிமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் மீது , திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியினரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் கடந்த ஆட்சியின் போது, திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் சொட்டுநீர் பாசனத்திற்காக 5000 மரக்கன்றுகள் நடப்படும் என அறிவித்தார்.
அதன்படி, 5000 மரக்கன்றுகள் நடப்பட்டதாக, அப்போது கூறப்பட்டது. ஆனால் அந்த மரக்கன்றுள் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியினரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில், ‘ முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களால் திண்டுக்கல் மலைக்கோட்டையில் சொட்டுநீர் பாசனத்திற்காக 5000 மரக்கன்றுகள் நடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அங்கு நடப்பட்ட்ட மரக்கன்றுகள் சரியாக பராமரிக்காத காரணத்தால்,
அந்த மரக்கன்றுகள் வீணாய் போயுள்ளது. மேலும் சொட்டுநீர் பாசன கருவிகள் என சில தகரங்கள் மற்றும் சொட்டுநீர் பாசன சில உபகரணங்கள் மட்டுமே அங்கு இருக்கிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுத்துள்ளனர்.
இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.