புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் விளையும், தயாரிக்கப்படும் பொருட்களுக்கு காப்புரிமை பெறுவது போல் ஆகும். அதாவது, பழனி பஞ்சாமிர்தம், சேலத்து மாம்பழம் போல அந்தந்த பகுதிகளில் சிறப்பாக விளங்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்படும். இதன்மூலம் வேறு பகுதிகளில் இந்த பொருட்களை போலியாக தயாரித்து விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது.
சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலை பூண்டு, ஈரோடு மஞ்சள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கத்தினர் அரசிடம், திண்டுக்கல் பூட்டிற்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதேபோல் காரைக்குடி ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் 2013 ஆம் ஆண்டு கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அவையாவன, சேலத்து மாம்பழம், ஓசூர் ரோஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை, ராஜபாளையம் நாய், கோடாலிகருப்பூர் சேலை இவைகளுக்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த பொருட்களை வெளியூர்களில் போலியாக தயாரித்து விற்பனை செய்வது குற்றமாகும்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…