பணமே வரல அப்புறம் எதற்கு ஏ.டி.எம்..?ஆத்திரத்தில் இயந்திரத்தை எட்டி உதைத்து..! கல்லை போட்டு உடைத்த மர்மநபர்
- ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர் பணம் வராத நிலையில் ஏ.டி.எம்மை உதைத்து ,கல்லை தூக்கி வீசி உடைத்த சம்பவக் காட்சிகள் அனைத்தும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- எட்டி உடைத்தவர் சேவுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி தெரியவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் பணம் வராத நிலையில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் எட்டி ஒங்கி ஒரு உதை உதைத்தார் இது மட்டுமல்லாமல் கல்லை தூக்கி வீசி உடைத்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி பதிவாகி உள்ளது.
பதிவாகிய சிசிடிவி காட்சிகள்:
வத்தலக்குண்டு – திண்டுக்கல் சாலையில் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அதன் அருகிலேயே வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்களின் பண பரிவர்த்தனைக்காக ஏ.டி.எம் இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
ஏ.டி.எம் அறைக்குள் வந்த ஒரு வாடிக்கையாளர் பணம் எடுப்பதற்கு முயற்சிக்கிறார்.பணம் வரவில்லை மேலும் பலமுறை முயற்சித்து பார்க்கிறார் இயந்திரத்தில் இருந்து பணம் இம்முறையும் வரவில்லை. ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர் ஏ.டி.எம் இயந்திரத்தை தன் காலால் பல முறை ஓங்கி எட்டி உதைக்கிறார். இதன் பின்னரும் ஆத்திரம் அடங்காமல் ஏ.டி.எம்ற்கு அருகில் கிடந்த கல்லை எடுத்து இயந்திரத்தை நோக்கி வீசி அதனை உடைத்து விட்டு பின்னர் வெளியேறி உள்ளார்.
இவருக்கு பின்னர் பணம் எடுக்க வந்த வாடிக்கைளார்களும் இவருடைய ஆத்திரத்தைக் கண்டு அதிர்ச்சியாகினர்.இந்த நிகழ்வுகள் அனைத்தும் காட்சிகளாக சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் இதனை பார்த்த வங்கி மேலாளர் சரண் இது குறித்து அளித்த புகாரின் பேரில் வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ் பெக்டர் பிச்சைபாண்டி விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் ஏ.டி.எம் மிஷினை காலால் பலமுறை எட்டி உதைத்தது மட்டுமல்லாமல் அதன் மீது கல்லை போட்டு உடைத்த ஆத்திரக்காரர் வத்தலகுண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது உள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.