” அதிமுக ஆலமரம் போல் வளர்ந்துள்ளது ” அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து..!!
- பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் அறிவிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
- அதிமுக ஆலமரம் போல் வளர்ந்துள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.அதே போல திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் திருவாரூரில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநால் விழாவை முன்னிட்டு 120 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக ஆட்சியை அழித்து விடுவேன் என்று TTV தினகரன் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக ஆலமரம் போல் வளர்ந்துள்ளதாக கூறினார்.