திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி.!
தேர்தல் முடிவுகள்: 543 தொகுதிகளிலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் 6.5 லட்சம் வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முகமது முபாரக்கை விட 4.33 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது.