தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 18 பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று அதிமுகவின் மைத்ரேயன் எம்.பி பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
எம்எல்ஏக்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ள நிலையில் 18 பேரையும் அ.தி.மு.க. கடத்தக் கூடும் என்று டி.டி.வி. தினகரன் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.இதனால் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அறிவுரை வழங்கி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் நேற்று இரவு குற்றாலத்தில் உள்ள இசக்கி ஹைவியூ விடுதிக்கு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வந்தனர்.
பின் அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தற்போது குற்றாலத்தில் இருந்து கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், 2 நாட்கள் குற்றாலம் ரிசார்ட்டில் தங்கிவிட்டு 3ஆவது நாள் சென்னைக்கு சென்றுவிடுவோம் .தாமிரபரணி மகாபுஷ்கர விழாவில் புனித நீராடிவிட்டு குற்றாலத்தில் ஓய்வெடுப்போம்.குற்றாலத்தில் தற்போது 20 பேர் உள்ளோம். இன்னும் 2 பேர் வந்து விடுவார்கள் என்று அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இதன் பின் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்திலிருந்து புனித நீராட பாபநாசம் புறப்பட்டு சென்றனர்.மகாபுஷ்கர விழாவின் நிறைவு நாளான இன்று, பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் புனித நீராடினார்கள்.
இந்நிலையில் அதிமுகவின் மைத்ரேயன் எம்.பி 18 எம்எல்ஏக்கள் வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தகுதி நீக்க எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைப்பது அவர்களது சொந்த விருப்பம். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தீர்ப்பு சத்தியத்திற்கு கட்டுப்பட்ட தீர்ப்பாக இருக்கும், சத்தியம் எங்கள் பக்கம் உள்ளது என்றும் மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார்.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…