அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அதில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று வாதிட்டது .கட்சி பதிவு செய்யப்படாததால் சின்னம் ஒதுக்க முடியாது.
எனவே தினகரனின் வேட்பாளர்களை சுயேச்சைகளாகத்தான் பார்க்க முடியும். அதனால், நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க முடியாது. அதேபோல், இடைத்தேர்தலுக்கும் ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது தேர்தல் ஆணையம்.
அதுபோல் இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் ஆணையம் ஆவணங்களை தாக்கல் செய்தது.
இதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குக்கர் சினத்தை ஒதுக்கி உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர்.இந்நிலையில் எங்கள் தரப்பிற்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் உச்சநீதிமன்றம் ஏதேனும் ஒரு சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குக்கர், விசில், ஆட்டோ ரிக்ஷா, ஆப்பிள், டிராக்டர் உள்ளிட்ட சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.
ஆனால் இதனை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.மேலும் தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னங்களில் இருந்து ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்களில் ஒன்றான பரிசுப் பெட்டி சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்வு செய்தது. இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…