அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் பதவி ஏற்க உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
ஆனால் தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் தேர்தலில் போட்டியிட தினகரனின் அமமுகவிற்கு குக்கர் சின்னம் வழங்கப்படவில்லை.அந்த சமயத்தில் தேர்தல் ஆணையம் அமமுக கட்சி அங்கிகரிக்கப்படாத கட்சி ,எனவே வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள் என்று தெரிவித்தது. மாறாக பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் பரிசு பெட்டி சின்னம் வழங்கப்பட்டது.அதன்படி தேர்தலிலும் போட்டியிட்டது அமமுக.
இந்நிலையில் அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் பதவி ஏற்க உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவுள்ளார்.மேலும் அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த இருக்கிறார்.தற்போதைய நிலையில் தினகரன் துணை பொதுச்செயலாளராக இருந்து வருகிறது.பின்னர் பொதுச்செயலாளராக தினகரன் பதவி ஏற்க உள்ளார்.
ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா பின்னர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…