தினகரன் மீது இரண்டு வழக்குகள் உள்ளன. நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததும் அவர் திகார் சிறை அல்லது புழல் சிறைக்கு செல்வார். ஆகவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தவறை உணர்ந்து திரும்ப வரவேண்டும் என்று வாலாஜாபேட்டையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் பேசினார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:-பேரறிஞர் அண்ணா முதல்வராக அமர்வதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காரணமாக விளங்கினார்.அண்ணாவின் கொள்கைகளை எம்ஜிஆர், அம்மா ஆகியோர் பின்பற்றி ஆட்சி செய்தனர். அண்ணா வாரிசு அரசியலை எதிர்த்தார். ஆனால் திமுக கருணாநிதியின் குடும்ப கட்சியாக விளங்குகிறது. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் கட்சியின் தலைவராக வந்துள்ளார்.
1967 ல் அண்ணா முதல்வராக இருந்த பொழுது கருணாநிதி பொது பணித் துறை அமைச்சராக இருந்தார். அப்பொழுது அரசு செய்யும் திட்ட பணிகளில் 2 ரூபாய் கமிஷன் வாங்கும் பழக்கத்தை கற்றுக் கொடுத்தவர் கருணாநிதி. ஊழலின் ஊற்றுக்கண் கருணாநிதி. ஊழலுக்காகவே ஒரு ஆட்சி இந்தியாவில் கலைக்கப்பட்டது என்றால் அது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி தான்.
புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் முதல்வராக இருந்த வரை கோட்டை பக்கமே தீயசக்தி கருணாநிதியால் வரமுடியவில்லை. புரட்சித்தலைவர் எம்.ஜிஆர், அம்மா ஆகியோர் மக்கள் நலன் பயக்கும் மகத்தான பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக ஆட்சி செய்தனர். இதயதெய்வம் அம்மா மீது, 13 பொய்யான வழக்கு போட்டவர் கருணாநிதி. அனைத்து வழக்குகளையும் தவிடு பொடியாக்கி நீதிமன்றத்தின் மூலம் நிரபராதி என்று நிரூபணம் செய்தவர் புரட்சித்தலைவி அம்மா.
DINASUVADU
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…