கருணாநிதி தீய சக்தி . “தினகரன் சிறைக்கு செல்வார்” ‘MLAக்கள் எங்கள் பக்கம் வாங்க’ முன்னாள் அமைச்சர் பேச்சு..!!
தினகரன் மீது இரண்டு வழக்குகள் உள்ளன. நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததும் அவர் திகார் சிறை அல்லது புழல் சிறைக்கு செல்வார். ஆகவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தவறை உணர்ந்து திரும்ப வரவேண்டும் என்று வாலாஜாபேட்டையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் பேசினார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:-பேரறிஞர் அண்ணா முதல்வராக அமர்வதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காரணமாக விளங்கினார்.அண்ணாவின் கொள்கைகளை எம்ஜிஆர், அம்மா ஆகியோர் பின்பற்றி ஆட்சி செய்தனர். அண்ணா வாரிசு அரசியலை எதிர்த்தார். ஆனால் திமுக கருணாநிதியின் குடும்ப கட்சியாக விளங்குகிறது. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் கட்சியின் தலைவராக வந்துள்ளார்.இவருக்கு பிறகு உதயநிதி தலைவராக வருவார். புரட்சித்தலைவர் எம் ஜி ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வாரிசு அரசியல் செய்யவில்லை. புரட்சித் தலைவருக்கு பிறகு அம்மா முதல்வராக வந்தார். அம்மாவிற்கு பிறகு விவசாயி குடும்பத்தில் பிறந்த எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராகியுள்ளார்.
1967 ல் அண்ணா முதல்வராக இருந்த பொழுது கருணாநிதி பொது பணித் துறை அமைச்சராக இருந்தார். அப்பொழுது அரசு செய்யும் திட்ட பணிகளில் 2 ரூபாய் கமிஷன் வாங்கும் பழக்கத்தை கற்றுக் கொடுத்தவர் கருணாநிதி. ஊழலின் ஊற்றுக்கண் கருணாநிதி. ஊழலுக்காகவே ஒரு ஆட்சி இந்தியாவில் கலைக்கப்பட்டது என்றால் அது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி தான்.
புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் முதல்வராக இருந்த வரை கோட்டை பக்கமே தீயசக்தி கருணாநிதியால் வரமுடியவில்லை. புரட்சித்தலைவர் எம்.ஜிஆர், அம்மா ஆகியோர் மக்கள் நலன் பயக்கும் மகத்தான பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக ஆட்சி செய்தனர். இதயதெய்வம் அம்மா மீது, 13 பொய்யான வழக்கு போட்டவர் கருணாநிதி. அனைத்து வழக்குகளையும் தவிடு பொடியாக்கி நீதிமன்றத்தின் மூலம் நிரபராதி என்று நிரூபணம் செய்தவர் புரட்சித்தலைவி அம்மா.
எல்லா கட்சிகளும் கோஷ்டி பூசலில் சிக்கி தவிக்கிறது. அம்மா நம்மை விட்டு பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்மா நல்லாசியுடன் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி கேபழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். அம்மா தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகின்றனர்.
எவர் தயவும் எங்களுக்கு தேவை இல்லை. மக்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள். ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டு மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டார். ஆனால் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று வரை மக்கள் கழகம் பக்கம் தான் உள்ளனர். 33 ஆண்டு காலம் அம்மாவுடன் இருந்து அம்மாவிற்கு துரோகம் செய்தவர்தான் சசிகலா. அம்மாவின் மரணத்திற்கு காரணம் சசிகலா குடும்பம்தான். தினகரன் மீது இரண்டு வழக்குகள் உள்ளன. நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததும் அவர் திகார் சிறை அல்லது புழல் சிறைக்கு செல்வார். ஆகவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தவறை உணர்ந்து திரும்ப வரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.
DINASUVADU