இரட்டை இலைச் சின்னத்திற்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் போட்டிபோட்டது.
இதைத்தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தது.அதாவது இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது சரியே என தீர்ப்பளித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.அதேபோல் தினகரன் – சசிகலா தரப்பு மனு தள்ளுபடி செய்துள்ளது.இந்த தீர்ப்பு தினகரன் – சசிகலா தரப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தீர்ப்பு தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.40 தொகுதிகளிலும் சுயேட்சையாக எங்கள் வேட்பாளர் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்கள் .
அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம், குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…