பாமகவில் இருந்து விலகிய மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அந்த வகையில் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க.-தே.மு.தி.க- த.மா.கா- புதிய தமிழகம் – புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றது.மேலும் இந்த கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் மக்களவை தேர்தலில் அதிமுக , பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது,பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தி ஏற்படுத்தியது. சமீபத்தில் நடிகர் ரஞ்சித் நான் பாமகவில் இருந்து விலகுகின்றேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டார்.அவர் கூறுகையில், அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பாமகவில் இருந்து விலகிய மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.இது பாமகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள்…
சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…