ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினரான டிடிவி.தினகரன் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் கோவமாக பதில் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் பெங்களூரூ பரப்பன அக்ரஹாரம் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், சசிகலாவைச் சந்திக்கும் நேரத்தின் அளவு குறித்து கேள்வி எழுப்பிய ஆங்கிலத் தொலைக் காட்சி செய்தியாளர், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் உள்ளே இருப்பதாக கூறினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட அறிக்கையில் உள்ள நேரத்திற்கும், உண்மையில் சசிகலாவைச் சந்திக்கும் நேரத்திற்கும் அதிக வேறுபாடு இருப்பதாக செய்தியாளர் தெரிவித்தார்.
கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் உண்மையை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகக் கூறி, அதே கேள்வியைத் திரும்பத் திரும்ப அந்தச் செய்தியாளர் கேட்டதால் தினகரன் ஆத்திரமடைந்தார். எப்போது வந்தாலும் 40 நிமிடங்களுக்கு மேல் சசிகலாவைச் சந்திக்க தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று தினகரன் ஆவேசத்துடன் பதிலளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…