திருச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கணேஷ் என்பவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் தினகரன் கட்சி பதிவு செய்யப்படாத கட்சி,இதனால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது திட்டவட்டமாக தெரிவித்தது.இதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குக்கர் சினத்தை ஒதுக்கி உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர்.இந்நிலையில் எங்கள் தரப்பிற்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் உச்சநீதிமன்றம் தேனும் ஒரு சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
பின் தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னங்களில் இருந்து ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்களில் ஒன்றான பரிசுப் பெட்டி சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்வு செய்தது. இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.
ஆனால் தினகரன் கட்சி பலகட்டமாக குக்கர் சின்னத்தை கேட்டு போராடி வந்தது.பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் தினகரன் கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்து இருந்தனர்.
அதேபோல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்களுக்கு அளிக்க கூடாது என்று மனு அளிக்கப்பட்டது.பின்னர் குக்கர் சின்னம் சுயேட்சை வேட்பாளர்களுக்கு வழக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது திருச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கணேஷ் என்பவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…