சிக்கலில் சிக்கிய தினகரன் அணி…!திமுகவில் இணையும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி …!வெளியானது ஆதாரம் …!
திமுகவில் நாளை இணைகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
அதில் உள்ள 18 எம்எல்ஏக்கள்மீது தகுதி நீக்க வழக்கு தொடரப்பட்டது.18எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.
அவர் வழங்கிய தீர்ப்பில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவர் செந்தில் பாலாஜி.இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் வென்று எம்எல்ஏ ஆகியிருந்தார் செந்தில் பாலாஜி.இதனால் அவர் எம்எல்ஏ பதவிபறிபோனது.
இருந்தாலும் தினகரன் அணியில் இருந்து வந்தார்.
திமுகவில் செந்தில் பாலாஜி இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் , முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி செல்வது போன்ற புகைப்படம் வெளியானது.இந்நிலையில் திமுகவில் நாளை இணைகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.