மாறி மாறி முடிவெடுக்கும் தினகரன் அணி …!மேல்முறையீடு செய்யவா …!வேண்டாமா …!குழப்பத்தில் தினகரன்

Published by
Venu

18 பேர் விவகாரத்தில் தினகரன் அணி தெளிவான குழப்பத்தில் இருந்து வருகிறது.
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.
Image result for கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு
 
இதையடுத்து இந்த வழக்கில்  தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்கு பின்  18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

பின்னர்  மதுரையில் தினகரன் கருத்து ஒன்றை தெரிவித்தார்.அவர் கூறுகையில், மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு செய்தனர் .ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.18 பேரின் நலனும், கட்சியின் நலனும், மக்களின் விருப்பமும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே ஆகும்.  தொகுதி மக்களை நேரில் சந்தித்து 18 பேரும் கருத்து கேட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
அதேபோல்  எதிர்க்கட்சியினர் பலரும் மேல்முறையீடு செய்யாமல் 18 பெரும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தினகரன் அணியை பொருத்தவரை தெளிவான குழப்பத்தில் உள்ளது போல் தெரிகிறது.காரணம் என்னவென்றால் 18 பேருடன் ஆலோசனைக்கு பின்னர் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர.ஆனால்  நேற்று தினகரன் கூறுகையில் ,மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு செய்தனர் .ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.இதிலிருந்தே தெளிவாக தெரிகிறது தினகரன் அணியினர் இன்று வரை கூட சரியான முடிவு எடுக்காமல் திணறி வருகின்றனர்.குறிப்பாக 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு தினகரன் அணிக்கு பெரிய அடியாகவே கருதப்படுகிறது.
 
 

Recent Posts

சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி! அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை!

சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…

8 hours ago

ஐபிஎல் 2025 : “கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கோங்க”! ஆர்சிபி ரசிகரை விளாசிய ரிஷப் பண்ட்!

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…

9 hours ago

“முதலமைச்சருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.,” செந்தில் பாலாஜி உருக்கம்.!

சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…

10 hours ago

புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி.! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.!

சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…

11 hours ago

“2026ல் விஜய் முதலமைச்சர் பதவியில் அமர்வது உறுதி” புஸ்ஸி ஆனந்த் குஷி பேச்சு.!

சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…

11 hours ago

“பிக் பாஸ் போனா டைவர்ஸ் தான்”…வெங்கடேஷ் பட்டை எச்சரித்த மனைவி!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…

11 hours ago