தாமிரபரணி ஆற்றில் புனித நீராடிய டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்…!

Default Image

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் புனித நீராடினார்கள்.
நேற்று தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
எம்எல்ஏக்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ள நிலையில் 18 பேரையும் அ.தி.மு.க. கடத்தக் கூடும் என்று டி.டி.வி. தினகரன் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.இதனால் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அறிவுரை வழங்கி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆடியோ வெளியானதில் எங்களுக்கு தொடர்பில்லை- தங்க தமிழ்ச்செல்வன்
இதன் பின்னர் நேற்று இரவு குற்றாலத்தில் உள்ள இசக்கி ஹைவியூ விடுதிக்கு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வந்தனர்.

பின் அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தற்போது குற்றாலத்தில் இருந்து கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், 2 நாட்கள் குற்றாலம் ரிசார்ட்டில் தங்கிவிட்டு 3ஆவது நாள் சென்னைக்கு சென்றுவிடுவோம் .தாமிரபரணி மகாபுஷ்கர விழாவில் புனித நீராடிவிட்டு குற்றாலத்தில் ஓய்வெடுப்போம்.குற்றாலத்தில் தற்போது 20 பேர் உள்ளோம். இன்னும் 2 பேர் வந்து விடுவார்கள் என்று அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இதன் பின் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்திலிருந்து புனித நீராட பாபநாசம் புறப்பட்டு சென்றனர்.மகாபுஷ்கர விழாவின் நிறைவு நாளான இன்று, பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் புனித நீராடினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்