எம்எல்ஏ கருணாஸ் உட்பட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு..!
எம்எல்ஏ கருணாஸ் உட்பட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது.
இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.அதேபோல் அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ். கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரில் கருணாஸ் மட்டும் அரசுக்கு எதிராக மாறியுள்ளார்.
இந்நிலையில் எம்எல்ஏ கருணாஸ் உட்பட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரில், விரைவில் நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி இழப்பு சட்ட விதி 6ன்படி சபாநாயகர் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.