தினகரன் கேட்டுக்கொண்டதால் அவரை சந்தித்தேன்…!உண்மையை உடைத்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ..!

Published by
Venu

டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதால் 2017 ஜூலை 12 ஆம் தேதி பொதுவான நண்பர் வீட்டில் அவரை சந்தித்தேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி.தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்தார்.அதற்கு அவர் துணைப்பொதுச்செயலாளர் ஆவார். தினகரன் அணியில் அவ்வப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து கூறி வருகின்றார்.
இந்நிலையில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என்று நேரம் கேட்டார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.முதலமைச்சர் பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்றார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
அதிலும் குறிப்பாக 2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம். கடந்த வாரமும் தினகரனை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சி செய்தார்.ஆனால் திரை மறைவில் எங்களிடம் பேசும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேடையில் எங்களை விமர்சிக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை வேடம் போடுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
Related image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இவ்வாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று அமைச்சர் தங்கமணி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கட்சிகளை இணைத்துக்கொண்டு நீங்களே முதல்வர் பதவியில் இருங்கள் என்று டிடிவி தினகரன் கடந்த மாதம் அதிமுகவுக்கு தூதுவிட்டார். தினகரன் கோரிக்கையை அதிமுக ஏற்காததால் எங்கள் மீது பொய்யான பரப்புரையை செய்கின்றனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

அதேபோல்  அமைச்சர் தங்கமணி கருத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் அமைச்சர் தங்கமணி கூறியதற்கு அவரிடம் ஆதாரம் இருந்தால் அதனை முதலில் வெளியிடட்டும்.ஆனால் ‘திகார் சிலையில் இருந்து விடுதலையான என்னை பன்னீர்செல்வம், 2017 ஜூலை மாதம் சந்தித்தார் என்பது உண்மை.கடந்த ஆண்டு நான் ஓ .பன்னீர் செல்வத்தை சந்தித்தது எனது கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும்.எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது தவறு என சந்திப்பின்போது பன்னீர்செல்வம் கூறினார்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள்.
எனது நண்பர் பலர் மூலமாக பன்னீர்செல்வம் தூது அனுப்பினார்.தர்மயுத்தம் நடத்தியது தவறு என்றும் கூறினார் பன்னீர்செல்வம்.என்னை முதலமைச்சராக வேண்டும் என்று பலமுறை தூதுவிட்டார் பன்னீர்செல்வம்.எங்கள் சந்திப்பில் சில ரகசியங்கள் இருப்பதால், அதனை ஓபிஎஸ் மறுக்க மாட்டார் .எடப்பாடி பழனிசாமி,பன்னீர்செல்வம் உட்பட 10 பேருடன் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தினகரன் கூறியது தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.அவருடன் அமைச்சர் உதயகுமார்,அமைச்சர் பாண்டியராஜன் உடன் இருந்தார்கள்.
அவர் கூறுகையில்,தினகரன் திட்டமிட்டு இந்த விவகாரத்தை ஏற்படுத்தியுள்ளார்.நேற்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோனையில் பேசியதை கேட்டு தினகரன் குழம்பியுள்ளார்.நேற்று முதல் புதிய பிரச்சனையை கூறி குழப்புகிறார் டிடிவி தினகரன்.தான் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற விரக்தியில் அலைந்து கொண்டிருக்கிறார்  தினகரன்.குறிப்பாக  தமிழக அரசை பாஜகவோடு சேர்ந்து நான் கலைக்க முயல்வதாக கூறி என்மீது தினகரன் சேற்றை வாரி இறைக்க முயல்கிறார்.
அதேபோல் பெரியகுளம்  சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமுவிடம் ரூ.500 கோடி அளிப்பதாக தினகரன் பேரம்  பேசியுள்ளார்.நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்.அதனால் நான் கடைசி வரை ஒரே இயக்கத்தில் தான் இருப்பேன்.என்னால் ஆட்சி கவிழாது.தர்மயுத்தம் நடைபெற்ற சமயத்தில் நான் நினைத்தால் அன்றே முதலமைச்சராக ஆகியிருப்பேன்.ஆனால் சசிகலா குடும்பம் ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்றிவிடக்கூடாது என்று தர்மயுத்தத்தில் இருந்தேன். எடப்பாடி பழனிசாமி அரசை கலைத்து விட்டு முதல்வர் ஆக முயற்சி என்பது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு.அதேபோல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்து மக்களை ஏமாற்றியவர் தினகரன் .ஆனால் அவர் அளித்த ரூ.20 நோட்டு தற்போது வரை கடைகளில் செல்லாது என்று மக்கள் புலம்புகிறார்கள்.
அதன் பின்னர் நான் தர்மயுத்தம் நடத்திய போது 2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி தினகரனை சந்தித்தது பேசினேன்.தினகரன் கேட்டதால்  பொதுவான நண்பர் ஒருவர் வீட்டில் சந்தித்தேன்.பலர் வலியுறுத்தியதால் அரசியல் நாகரீகம் கருதி தினகரனை சந்தித்தேன். தினந்தோறும் ஆட்சி கவிழும் என தினகரன் கூறிய நிலையில் அவரை சந்தித்தேன்.

Recent Posts

ஜீன்ஸ் அணிந்ததால் சர்ச்சை: செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து மேக்னஸ் கார்ல்சன் விலகல்!

நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…

15 minutes ago

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…

50 minutes ago

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

2 hours ago

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு.!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…

2 hours ago

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

13 hours ago