துணை முதல்வர் பேச்சுக்கு தினகரன் தரப்பு பதிலடி !

Default Image

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த டி.டி.வி தினகரனின் ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது, “தனிக்கட்சி துவங்கவுள்ளதாக தினகரன் தெரிவித்தவுடன் ஓ.பி.எஸ் உடனடியாக பணம் இருக்கும் வரை அவர் கட்சி நடத்துவார், இறுதியில் அவருடன் 10 பேர் கூட இருக்கமாட்டார்கள் என கூறியுள்ளார்.
பணம் வைத்துக்கொண்டா ஓ.பி.எஸ் தனது தர்மயுத்தத்தை தொடங்கினார், அந்த பணம் தீர்ந்தவுடன் இ.பி.எஸ் உடன் இணைந்து கொண்டாரா. தினகரன் இல்லையென்றால் இவர் யார் என்றே தமிழக மக்களுக்கு தெரிந்திருக்காது.
நடிகர்கள் கட்சி துவங்குவதும் சுற்றுப்பயணம் செல்வதாக அறிவிப்பதும் அவர்களது உரிமை. ஆனால் கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இவர்கள் போட்டியிட்டு தங்களது பலத்தை நிரூபித்திருக்கலாமே. மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து போராடாமல் இவர்கள் யாரும் அரசியலில் வெற்றி பெற இயலாது.
எங்களது 18 எம்.எல்.ஏ க்களின் தகுதி நீக்க வழக்கில் சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றாலும் கவலையில்லை. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற நிலை வரும்போது நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்மன்றம் சென்று கேள்வி எழுப்புவதோடு கட்சியினையும் இரட்டை இலை சின்னத்தையினையும் மீட்போம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இருந்த நடைமுறையை மாற்றி உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு நேரடி தேர்தல் என இந்த அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவர்கள் ஜெயலலிதாவை மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளதால் இதிலும் சுயேட்சையாக களம் இறங்காமல் கட்சி ரீதியாக தேர்தலை சந்திக்கும் வகையிலேயே தினகரன் தனிக்கட்சி துவங்க முடிவெடுத்துள்ளார்” என பேட்டி அளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்