தினகரனால் ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியாது !

Default Image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை தினகரன் நிரப்புவதாக நான் கருதவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக சார்பில் சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள சின்னமலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி னர்.

அப்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை தினகரன் நிரப்புவதாக நான் கருதவில்லை. பொதுத் தேர்தல்தான் அதை முடிவு செய்யும். இப்போது அதுகுறித்து கருத்து கூற முடியாது.

 

தினகரன் வெற்றி பெற்றதற்கு திமுகதான் காரணம் என்று அதிமுக கருத்து கூறியிருக்கிறது. இது, தோற்பவர்களின் வழக்கமான புலம்பல்தான்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பிறகு, அதுபற்றி தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக் கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

source: dinasuvadu.com

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்