தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணமாகும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த துரைமுத்து என்பவரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின்படி, காவல்துறையினர் மணக்கரை பகுதிக்கு விரைந்தனர். அப்போது, காவல்துறையினர் வருகையை அறிந்த துரை முத்து மற்றும் அவரது சகோதரன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர் மீது வீசியுள்ளார். இதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு.சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின் தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளையில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியில் ரவுடிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுப்பிரமணியம் என்ற காவலர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மறைந்த காவலரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சம்பவத்தின்போது வல்லநாடு வனப்பகுதியில் ஆயுதங்களுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் வரும் செய்திகள், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணமாகும்.காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் இதுபோல் எந்த ஒரு சம்பவமும் இனி நடந்திராதவண்ணம் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு பதியிட்டுள்ளர்.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…