டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா இல்லையா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு:
டில்லி உயர் நீதிமன்றம், டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இதை எதிர்த்து ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்.,மதுசூதனன் ஆகியோர் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை:
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டி.டி.டி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு:
பின் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு:
இனிவரும் தேர்தல்களில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கமுடியுமா என தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது:
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில்,டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது.அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது.பொதுப்பட்டியலில் உள்ள சின்னத்தை குறிப்பிட்ட கட்சிக்கு வழங்குவது நடைமுறை அல்ல என்று பதில் அளித்தது.
உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு:
இந்நிலையில் குக்கர் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் இன்று காலை நீதிபதி கன்வில்கர் அமர்வு தீர்ப்பு அளித்தது.
அதில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா இல்லையா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
மேலும் “இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…