அமமுக-விற்கு நடிகர் செந்தில் உள்பட 5 பேரை அமைப்பு செயலாளராக நியமனம் செய்த தினகரன்
அமமுகவின் அமைப்பு செயலாளராக கதிர்காமு ,நடிகர் செந்தில் உள்பட 5 பேரை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன்.
மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது.கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
இந்த நிலையில் அமமுகவின் அமைப்பு செயலாளராக 5 பேரை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன். அதன்படி 1.சிவ ராஜமாணிக்கம் ,2.கதிர்காமு,3.தேவதாஸ்,4.ஹென்றி தாமஸ்,5.செந்தில் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.