இனி தினகரன் குக்கரால் விசில் அடிக்க முடியாது!! தேர்தல் ஆணையம் தர மறுப்பு!!கலக்கத்தில் தினகரன் அணி
- தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு
- உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
- தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு
- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
- தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது
தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு:
டில்லி உயர் நீதிமன்றம், டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இதை எதிர்த்து ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்.,மதுசூதனன் ஆகியோர் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை:
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டி.டி.டி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு:
பின் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு:
இனிவரும் தேர்தல்களில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கமுடியுமா என தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது:
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில்,டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது.அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது.பொதுப்பட்டியலில் உள்ள சின்னத்தை குறிப்பிட்ட கட்சிக்கு வழங்குவது நடைமுறை அல்ல என்று பதில் அளித்துள்ளது.
அதுபோல் டிடிவி தினகரன் ஆர்கே நகர் தேர்தலுக்கு பின் நடத்திய அனைத்து கூட்டங்களிலும், அமமுகவின் சின்னமாக இந்த குக்கர் சின்னம்தான் பயன்படுத்தப்பட்டது.இதனால் தினகரன் அணி கலக்கத்தில் உள்ளது.