10-ம் வகுப்பு மாணவர்களை கேலி செய்யாதீர்கள் – நெல்லை மாவட்ட துணை கமிஷனர்
10-ம் வகுப்பு மாணவர்களை கேலி செய்ய வேண்டாம் என நெல்லை மாவட்ட துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, இந்த மாணவர்களை கேலி செய்யும் விதமாக, இணையத்தில், மீம்ஸ்கள் உலா வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து திருநெல்வேலி துணை கமிஷினர் அர்ஜுன் சரவணன் அவர்கள் கூறுகையில், 10-ம் வகுப்பு மாணவர்களை கேலி செய்ய வேண்டாம் எனவும், அனைவரும் செய்யும் கேலியால், மன உளைச்சல் அடைந்ததாக மாணவர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.