மத்திய அரசின் டிஜிட்டல் சஹி திட்டம் – ஆளுநர் இன்று தொடங்கி வைத்தார்!
சமூக மேம்பாடு திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசின் டிஜிட்டல் சஹி திட்டமானது இன்று தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டமானது டிஜிட்டல் இந்தியாவை மேலும் வலுப்படுத்தும் என்றும் இதனால் கிராமப்புற பெண்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.இந்த திட்டமானது எதிர்காலத்தில் நாட்டை வலுப்படுத்துவதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.