டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வந்த டிஜிட்டல் போர்டு!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வந்தது டிஜிட்டல் போர்டு. மதுகுடிப்போர் மதுபானங்களின் விலைகளை அறிந்துகொள்ள ஏதுவாக டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. மது பிரியர்கள், எந்தெந்த மதுபானங்கள் எவ்வளவு விலையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகிறது என்பது குறித்து டிஜிட்டல் போர்டு மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழகத்தில் மாவட்டத்துக்கு 5 கடைகள் வீதம் முதற்கட்டமாக 200 டாஸ்மாக் கடைகளை நவீனப்படுத்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனையானது மேற்கொள்ளப்படுகிறது.