“அரியர் மாணவர்களின் அரசனே” முதல்வரை புகழ்ந்து ஈரோட்டில் டிஜிட்டல் பேனர்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அரியர் மாணவர்களின் அரசனே என முதல்வரை புகழ்ந்து ஈரோட்டில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்து, சுற்றுலா தலங்கள் என அனைத்து துறைகளும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது தான் அரசு சில தளர்வுகளுடன் மக்களை வெளியே செல்ல அனுமதித்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்கள் படித்து வருகின்றனர். அதிலும் தற்போது கல்லூரியில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பொறியியல், கலை படிப்புகளில் அரியர் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்கள் முதல்வரை சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்னும் கொஞ்சம் மேலே சென்று கொல்லம் பாளையத்தில் “அரியர் மாணவர்களின் அரசனே” என முதல்வரை புகழ்ந்து கூறி பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” எனும் திருக்குறளுடன் நீர் வாழ்க வாழ்க என போட்டு இப்படிக்கு அரியர் மாணவர்கள் என பேனர் வைக்கப்பட்டுள்ளது.