தற்கொலை செய்துகொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல் சொந்த ஊரான தேனி அல்லிநகரத்தில் தகனம் செய்யப்பட்டது.
இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் தற்கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உடற்கூறாய்வு நிறைவடைந்து அவரது சொந்த ஊரான தேனி ரத்தின நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் டிஐஜி விஜயகுமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்நது, அவரது உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. அவரது உடலை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தோளில் தூக்கி சென்றனர். இதனை தொடர்ந்து, விஜயகுமாரின் சொந்த ஊரான தேனி அல்லிநகரத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…