#BREAKING: டீசல் விலை உயர்வால் ..பார்சல் லாரி வாடகை 25% உயர்வு.!
டீசல் விலை லிட்டர் ரூ.85 ஆக அதிகரித்துவிட்டதால் லாரி வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வை அடுத்து பார்சல் லாரி வாடகை கட்டணம் இன்று முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளது என உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.63 ஆக இருந்தபோது வசூலித்த லாரி வாடகையே தற்போது வசூலிக்கப்படுகிறது. ஆனால், தற்போது லிட்டர் விலை ரூ.85 ஆக உயர்ந்துவிட்டதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பார்சல் லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் கண்ணன், கலால் வரியை குறைப்பதன் மூலம் டீசல் விலையை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார்.