நாட்டில் கள்ள தொடர்பே குத்தமில்லாத போது மீடூ எப்படி குத்தமாகும்….!!வறுத்தெடுத்த இயக்குநர்..!!!மிரண்ட மீடூ…!!
நாட்டில் கள்ளத்தொடர்பு தவறில்லை என்று சொல்லும் போது மீ டூ எப்படி தவறாகும் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் மீடூவிற்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார்.
பணி இடங்களில் பாலியல் துன்புறுத்தல் நடந்தாக #MEETOO என்ற ஹேஷ்டெக் மூலம் தங்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவித்து வருகின்றனர். அப்படி தெரிவித்ததில் அரசியல் வட்டாரங்கள்,சினிமா வட்டாரங்கள் என்று வலம் வர துவங்கியது இந்த மீடூ இதில் பாலிவூட், மற்றும் இந்தியாவின் மத்திய வெளியூறத்துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது மீடு புகர்களை கொழுத்தி போட்டனர் பெண் பத்திரிக்கையாளர்கள் இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாரதபிரதமரே இந்த விவகாரத்தில் தலையிட்டு விளக்கம் கேட்க பட்டது.இதனை தொடர்ந்து பதிவிலிருந்து பாதிலே கழற்றிவிடப்பட்டார்.இப்படி இந்த மீடு புயலில் மத்திய மந்திரியை அரசியலில் சாய்த்தது.
இதனை தொடர்ந்து தமிழக்கத்தில் மீடு புயல் கவிஞர் வைரமுத்துவை வாய்திறக்க வைத்தது.பாடகி சின்மையி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகாரை மீடுவில் தெரிவித்தார் இது தமிழகத்தில் பரபரப்பையும்,விவாதத்தையும் கிளப்பிவிட்டது. ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை,நடிகை அமலப்பால் ,தற்போது பிக்பாஸ் யாஷிகா என்று லீஸ்ட் பெரிதாகி கொண்ட போன நிலையில் பாலிவூட் நடிகை தனுஸ்ரீ தத்தாவின் நான பட்டேக்கர் மீதான பாலியல் புகார் தான் இதற்கு முன்னோடியாக இருந்தது.
இப்போழுது இயக்குநர் கள்ளதொடர்புடன் மீடுவை இணைத்து பேசியுள்ளார் அவர் பேசிய கள்ளத்தொடர்பு என்பது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பாகும்.உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு என்னவென்றால் ஆண் – பெண் இடையேயான கள்ள உறவு ஆனது கிரிமினல் குற்றமில்லை அதாவது திருமணமான ஒரு பெண் வேறு யாருடனாவது கள்ள உறவு வைத்தால் அது குற்றமில்லை என்றும் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.அதில் 5 நீதிபதிகளில் 3 பேர் கள்ள உறவுக்கு ஆதரவு அளித்து தீர்ப்பளித்தனர்.
அதில் கள்ளத்தொடர்பு கிரிமினல் குற்றமாகாது.இந்த கள்ள உறவால் விவகாரத்துகூட நடக்கலாம்.இந்த உறவினால் யாருரையும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில் அது குற்றமில்லை.இந்த உறவானது தற்கொலைக்கு தூண்டப்பட்டால் மட்டுமே அது கிரிமினல் குற்றமாக கருதப்படும் என்று நீதிபதிகள் தனடு தீர்ப்பில் கூறினர்.இந்த தீர்ப்பை திருமணமான பெண்ணுடன் வேறு ஆண் கள்ள உறவில் ஈடுபடல் தொடர்பான சட்டப்பிரிவு 497 -ன் படி குற்றம் எனக்கருதி உறவு கொண்ட அந்த ஆணுக்கு மட்டும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்பது விரோதமானது.
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அந்த 497 சட்டப்பிரிவை ரத்து செய்தும் நீதிபதில் பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். இதனை மேற்கொள் காட்டியே இயக்குநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.என்ன தெரிவித்தார் என்றால் திருமணத்துக்கு பிறகு கள்ளத் தொடர்பு வைத்திருந்தால் கூட தவறில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில்,மீ டூ விவகாரம் எப்படி தவறாகும் என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த கேள்வியை சென்னையில் நடைபெற்ற எவனும் புத்தனில்லை என்ற திரைப்பட ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் ஒரு சின்மயியால் இந்த சமூகத்தில் உள்ள ஆண்களை மாற்றிவிட முடியுமா? மற்றும் திருமணத்துக்கு பிறகு கள்ளத் தொடர்பு வைத்திருந்தால் கூட தவறில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில்,மீ டூ விவகாரம் எப்படி தவறாகும் என கேள்வி எழுப்பி உள்ளார்.
DINASUVADU