கூட்டணியில் இருந்தபோது அதிமுகவுக்கு, பாஜக தடையாக தெரியவில்லையா? – கரு.நாகராஜன்

karunagarajan

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக அதிமுக அறிக்கையும் வெளியிட்டது.

இதனை தொடர்ந்து, அதிமுகவின் அறிக்கை குறித்து அண்ணாமலை அவர்கள், பாஜக தேசிய தலைமை இதுகுறித்து பேசும் என்று தெரிவித்திருந்தார். அதன்பின், அண்ணாமலை அவர்கள் டெல்லி சென்று அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து  விளக்கமளித்தார்.

இந்த நிலையில், அதிமுக – பாஜக முறிவு குறித்து அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள், அதிமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்த பாஜக நீக்கப்பட்டுள்ளது. அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டியான அண்ணாமலை கூட்டணியை கூட பாராமல் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்தார். தன்னைதானே விளம்பரப்படுத்தும், ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவமில்லாத அரசியல்வாதிதான் அண்ணாமலை என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கருத்துக்கு பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், கூட்டணி குறித்து தேசிய தலைமை அறிவிக்கும். கூட்டணியில் இருந்தபோது அதிமுகவுக்கு, பாஜக தடையாக தெரியவில்லையா? இப்பொது தான் தெரிகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்