விஜய்க்கு கோவம் வர அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தாரா உதயநிதி.? தமிழிசை கேள்வி.!
விஜய்க்கு கோவம் வர வேண்டும் என அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தாரா உதயநிதி என்ரூ பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், திமுகவை நேரடியாக விமர்சனம் செய்தார். ஊழல் , குடும்ப ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகின்றனர் என கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு திமுக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்தது. காய்த்த மரம் தான் கல்லடி படும் . திமுக இது போல பல்வேறு எதிர்ப்புகளை கண்டுவிட்டது. திமுக ஆலமரம் போன்றது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் கருத்து கூறியிருந்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின், விஜயின் கருத்துக்களுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
இப்படியான சூழலில், இன்று உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் குமார் தனது கார் ரேஸிங் நிறுவனத்தில் உள்ள ரேஸிங் கார் மற்றும் மற்ற உபகரணங்களில் SDAT எனும் தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையின் சின்னத்தை குறிப்பிட்டு இருந்ததற்கு நன்றி தெரிவித்தும், அவரது ரேஸிங் போட்டிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும் பதிவிட்டிருந்தார்.
இச்செயல் குறித்து தான் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது விமர்சனம் செய்துள்ளார். அதில், “விஜய்க்கு கோவம் வரவேண்டும் என்றா., உதயநிதி அஜித்கு வாழ்த்து தெரிவித்து தெரிவித்தார்.? ” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “உலக அரங்கிற்கு விளையாட்டை முன்னிறுத்தி செல்வதை வாழ்த்தும் அரசு, சாமானிய மக்கள் பயன்படுத்தும் மாநகராட்சி விளையாட்டு பூங்கா மைதானத்தில் 1 மணிநேரம் பயிற்சி பெற ரூ.1,200 கட்டணம் வசூலிக்கின்றனர்.” என்றும் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.