பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா?.. இதனை ஈபிஎஸ் கண்டித்தாரா? – ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி
பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டார் என ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி.
சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர், செயல்திட்டத்தில் இல்லாததை பொதுக்குழுவில் எழுப்பியது தவறு. சில தலைவர்களுக்கு கட்சியின் எதிர்காலம் குறித்து கவலையில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணியமாக நடத்தவில்லை. பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும். ஒற்றை தலைமை என ஏற்கனவே சொல்லி தந்ததை பொதுக்குழுவில் ஒப்பித்தனர். ஒற்றைத் தலைமை பற்றி பேச அனுமதித்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதுபோல் தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டார், ஓ.பன்னீர்செல்வம் பேசி கொண்டியிருக்கும் போதே பாதியில் மைக் ஆஃப் செய்யப்பட்டது, அவர் மீது பாட்டில்கள் வீசினார்கள், தரக்குறைவாக பேசினார்கள் என்றும் குற்றசாட்டினார். ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசியதை எடப்பாடி பழனிசாமி கண்டித்தாரா? எனவும் கேள்வி எழுப்பினார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திட்டமிட்டே ஒற்றை தலைமை குறித்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அதிமுகவில் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.
கட்சியின் பொருளாளரான ஓபிஎஸ்-ஐ வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்க கூட அனுமதிக்கவில்லை. நிர்வாகிகள் ஈபிஎஸ் பக்கமும், தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமும் உள்ளதாகவும், அதிமுக, பழனிசாமியின் சொத்தோ, பன்னீர்செல்வத்தின் சொத்தோ அல்ல, அது தொண்டர்களின் சொத்து எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுகவில் இரட்டை தலைமையே சிறந்தது என வலியுறுத்தியுள்ளார்.