இதை செய்தது தவெக தொண்டர்கள் தானா? நெகடிவ் செய்திகளை பரப்ப முயற்சியா?
தவெக மாநாட்டில் நெகட்டிவான செய்திகளைப் பரப்பச் சிலர் முயற்சிப்பதாகக் களத்தில் இருக்கும் அக்கட்சியின் தொண்டர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
விழுப்புரம் : பல்வேறு சவால்களையும், தடைகளையும் தகர்த்து விக்ரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விக்ரவாண்டியை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.
தமிழகம் இதுவரை பார்த்திடாத மாநாட்டு நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்துக்கொண்டு இருக்கும் சூழலில், அக்கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும், விஜய் பெயருக்கு இழிவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் களத்தில் இருக்கும் அக்கட்சியின் தொண்டர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மாநாடு திடலில், விஜயின் தொண்டர்கள் இருக்கைகளை உடைத்ததாகவும், திடல் அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே சிகிரெட் உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருவதாகவும் பிரபல செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியாகின.
அது மட்டும் இன்றி விஜயின் தொண்டர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் அட்ராசிட்டி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து தினசுவடு செய்தி நிறுவனம் களத்தில் இருக்கும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியது.
அப்போது பேசிய அவர்கள், விஜய் தங்களுக்கு முன்கூட்டியே பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளதாகவும், அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதை முதல் உறுதி மொழியாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், தவெக மாநாடு குறித்து நெகட்டிவான செய்திகளைப் பரப்பச் சிலர் முயல்வதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், எது எப்படியோ “நம்ம குறிக்கோள் நோக்கி போயிக்கிட்டே இருக்கனும்” என விஜய் பாணியிலேயே பதில் அளித்தனர்.
மாநாட்டு திடலில் மக்கள் முன் வரிசையை சேர் களில் அமர முந்திக்கொண்டு சென்ற பின், கேமரா கொண்டு வந்த media காரர்,
களைந்து கிடந்த சேர்களின் நடுவில் சில சேர்களை படுக்க போட்டு, ஃபோட்டோ எடுத்துட்டு போனார், சிறிது நேரத்தில் தந்தி TV la இந்த ஃபோட்டோ செய்தியா வருது…
ஒரு நியாயம் வேணாமா??— Balaji (@balaj6) October 27, 2024
1. விஜய் வார்த்தையை காலையே நொறுக்கிய தொண்டர்கள்..
2. அரிவாளை காட்டி ஆபாசமாக பேசி அதிமுக தலைவர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்..
3. தவெக மாநாடு நடைபெறும் பகுதியில் செல்போன் சிக்னல் பாதிப்பு..
வன்மத்தின் உச்சத்தில் @ThanthiTV 😂#TvkVijayMaanadu #தமிழகவெற்றிக்கழகம்
— Lakshyaa (@Luxx_bae) October 27, 2024