சென்னை பச்சையப்பா கல்லூரியை சேர்ந்த 2 மாணவர்கள் நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்தவர்களை பயமுறுத்தியதும் ஒரு மாணவனை தாக்கியதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதனை அறிந்த காவல்துறையினர் அந்த 2 மாணவர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும், பச்சையப்பா கல்லூரி முதல்வர் அந்த மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த 2 மாணவர்களின் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் அவர்களின் கைகள் கட்டு போட்டிருப்பது போல் உள்ளது. மேலும் காவல்துறையினர் அந்த மாணவர்களை தாக்கியிருக்கலாம் தான் என்று ஒரு சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது நேற்று நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கைகள் முறிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காவல்துறையினர் கீழே விழுந்து உடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கைதிகளுக்கு என்ன நடந்தாலும் காவல்துறையினர் தான் பொறுப்பு.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல்!என்று கூறியுள்ளார்.இவரின் கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேலும், நடுரோட்டில் கத்திகளோடு ரௌடிதனம் செய்தும், பயணிகளை பயமுறுத்தியும், சக மாணவர்களையும் தாக்கியவர்கள் மாணவர்களே இல்லை சமூக விரோதிகள்.
இவர்களுக்கு முட்டுக்கொடுப்பது தேவையில்லாத செயல் என்று கூறியுள்ளனர்.அதற்கு சரவணன் அண்ணாதுரை கூறியதாவது போலீஸ் தண்டனை கொடுத்தால் நீதிமன்றங்கள் தேவையில்லை.
யாருக்கு என்ன சட்டம் என்று நம் சட்டம் சொல்கிறது.எந்த சட்டம் கையை உடைக்க சொல்கிறது?நாளை வாகனத்தை மஞ்சள் கோட்டை தாண்டி நிறுத்தினால் காவல்துறையினர் காலை உடைத்தால் சரியென்று சென்று விடலாமா?என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…