அரசை குறை கூறுவதையை ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சுஜித்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இரவு, பகல் பாராமல் சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறுவனை உயிரோடு மீட்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதுபோன்ற தொழில்நுட்பத்துடன் இதற்கு முன்பு மீட்பு பணிகள் நடந்ததில்லை.மீட்பு பணிகள் குறித்த ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் தவறானது.அரசை குறை கூறுவதையை ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் தேனியில் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றது, அப்போது இந்த அளவிற்கு மீட்பு பணிகள் நடைபெறவில்லை. தேனி நிகழ்வின் போது ஸ்டாலின் அங்கு சென்றிருந்தாரா? அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டிருந்தார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…