வந்தே பாரத் ரயிலா? வந்தே “இந்தி” ரயிலா? – சு.வெங்கடேசன் எம்.பி
உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்க என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
பிரதமர் பங்கேற்கும் சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு அந்த வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருப்பதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘வந்தே பாரத் ரயிலா? வந்தே “இந்தி” ரயிலா? சீனியர் லோகோ பைலட்களையே புதிய ரயில் துவங்கும் போது பணியமர்த்துவது வழக்கம். ஆனால் பிரதமர் பங்கேற்கும் சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு அந்த வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவு.
இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிப்பு. சென்னை இரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்க’ என ட்வீட் செய்துள்ளார்.
இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிப்பு.
சென்னை இரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு
கண்டிக்கத்தக்கது.உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்க. 2/2@GMSRailway
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 3, 2023