இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று இரவு பதிவு ஒன்றை பதிவிட்டார். அந்த பதிவு யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது. ஏனென்றால் தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி அறிவித்தார்.
அவர் தன் பதிவில், தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டு இருந்தார். தோனியின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தோனியின் ஓய்வு குறித்து பல அரசியல் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 331 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியதற்காகவும், நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்பை வென்ற ஒரே ” கூல் கேப்டன்” என்ற பெயரிலும், எம்.எஸ்.தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்.
டோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என பதிவிட்டுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…