நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்பை வென்ற ஒரே ” கூல் கேப்டன்” தோனி – தமிழக முதல்வர்.!

Default Image

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று இரவு பதிவு ஒன்றை பதிவிட்டார். அந்த பதிவு  யாரும் எதிர்பாராத வகையில்  இருந்தது. ஏனென்றால் தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி அறிவித்தார்.

அவர் தன் பதிவில்,   தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டு இருந்தார். தோனியின் ஓய்வு அறிவிப்பு  ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தோனியின் ஓய்வு குறித்து பல அரசியல் தலைவர்கள்  கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 331 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியதற்காகவும், நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்பை வென்ற ஒரே ” கூல் கேப்டன்” என்ற பெயரிலும், எம்.எஸ்.தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்.

டோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்