தருமபுரி:முத்தம்பட்டி அருகே நடுவழியில் கன்னூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு.
வடகிழக்கு பருவ மழையினால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்,பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கியுள்ளது.
இந்த நிலையில்,கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூருக்கு இன்று அதிகாலையில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.இந்த ரயில் தருமபுரி முத்தம்பட்டி அருகே வந்தபோது நடுவழியில் அங்கு மண்சரிவினால் தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் மீது மோதியது.இதனால்,கண்ணூர் – யஷ்வந்த்பூர் விரைவு பயணிகள் ரயிலின் முன்பெட்டிகள் தடம் புரண்டது.
இதன்காரணமாக,4 மணி நேரமாக பயணிகள் தவித்துள்ளனர்,ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து மீட்பு பணிகளுக்கான பிரத்தியேக ரயில் வந்த பின்பு தண்டவாளம் சரி செய்யும் பணி தொடங்கும் எனவும் ரயிலில் வந்த 1,850 பயணிகளும் காயமடையாமல் பத்திரமாக உள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…