நாம் மை அடித்து விளையாடுவோம்.. இவர்கள் இப்படி விளையாடுகிறார்கள்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.!
தர்மபுரி பள்ளி மாணவர்கள் செயல் பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், நாம் எல்லாம் ஒருவர் மீது ஒருவர் மை அடித்து விளையாடுவோம். ஆனால் இந்த மாணவர்கள் மேஜை பொருட்களை உடைத்து விளையாண்டு உள்ளனர் என கூறினார்.
தருமபுரி மாவட்டம் மல்லாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அண்மையில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நிறைவு பெற்றது. இதனையடுத்து அங்குள்ள 12ஆம் வகுப்பு மாணவர், மாணவியர் வகுப்பில் உள்ள மேஜை, மின்விசிறி ஆகிய பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
5 மாணவர்கள் சஸ்பெண்ட் :
இது குறித்த வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவியது. அந்த மாணவர்களின்பெற்றோர் சார்பில், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறினரலும், வீடியோ வைரலானதால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் அச்செயலில் ஈடுப்பட்ட 3 மாணவர்கள் 2 மாணவிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் :
இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில் , நாம் எல்லாம் படித்த காலத்தில் பள்ளி இறுதி நாளில் ஒருவர் மீது ஒருவர் மை அடித்து விளையாடுவோம். ஆனால் இந்த (தர்மபுரி) மாணவர்கள் மேஜை போன்ற பொருட்களை உடைத்து விளையாண்டு உள்ளனர்.
பொதுச்சொத்து சேதம் :
இது குறித்த அவர்கள் பெற்றோர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். மேலும், பொது சொத்துக்களை சேதப்படுத்துவது குற்றம் எனும் சட்டம் பற்றி அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டியுள்ளது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.