தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் எனும் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர்களாக லட்சுமணன் மற்றும் சின்னமுத்து ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு இந்த இரண்டு ஆசிரியர்களும் தொடர்ந்து செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை வீட்டில் சொன்னால் மதிப்பெண் குறைந்து விடுவதாக கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஒருநாள் அந்த ஆசிரியர்கள், மாணவியிடம் எல்லை மீற முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளர்.
தகவல் அறிந்து ஊர் மக்களுடன் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியருடன் பெற்றோர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த ஆசிரியர்கள் மது போதையில் இருந்துள்ளனர். பின்னர் தலைமை ஆசிரியரிடம் இச்சம்பவம் குறித்தும் பலனளிக்காத காரணத்தால், இரண்டு ஆசிரியர்களையும் ஊர் மக்கள் தாக்கியுள்ளனர். தகவலறிந்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்து அவர்களிடம் உள்ள செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாணவி பென்னகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், விசாரணைக்காக மாணவி அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டு ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்து கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…