பேனருக்கு பதில் மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்த தனுஷ் ரசிகர்கள்..!
தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான “அசுரன்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனுஷ் அடுத்த திரைப்படமாக “என்னை பாயும் தோட்டா” திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கட்டவுட் , பிளக்ஸ், பேனர் போன்றவை வைப்பதற்கு செலவு செய்வதற்கு பதிலாக ஆதிதிராவிட மகளிர் விடுதியில் உள்ள மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர்.
இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள நெல்லை சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சரவணன் , இதில் கடந்த வாரம் ஆதிதிராவிட மகளிர் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர்களது தேவையான மேஜை நாற்காலிகள், மைக் ஆம்ப்ளிபயர் , நூலகத்திற்கு தேவையான புத்தகம் வேண்டும் என தெரிந்து கொண்டேன்.
அதனை தனுஷ் நற்பணி இயக்கத்தினரும் தெரிவித்தபோது நான்கே நாட்களில் அனைத்தும் ஏற்பாடுகளையும் தயார் செய்து கொடுத்தனர். நெல்லை மாநகர தனுஷ் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் தர முன்வந்த ரசிகர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட மாநகர காவல்துறை சார்பில் நன்றி என தெரிவித்துள்ளார்.