கழுத்தறுக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த டிஜிபி..!
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள், கழுத்தறுக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் நேற்று கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம், முத்துசாமி மகன் ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆறுமுகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக அபராதம் விதித்தது குறித்து ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், கையில் வைத்திருந்த கத்தியை வைத்து குத்தியுள்ளார். இதில் படுகாயமைடந்த பெண் காவலரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புக்கு நின்ற பெண் காவலருக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் அவருக்கு 5 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள், கழுத்தறுக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
கழுத்தறுக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த டிஜிபிhttps://t.co/vMnJYlSBgZ#DGPhospitalvisit #TirunelveliDistrictPolice #SIMargarettheresa #getwellsoon#DGPSylendrababuIPS #TNPolice #TamilNaduPolice pic.twitter.com/0RXZC6oWaX
— Tamil Nadu Police (@tnpoliceoffl) April 24, 2022