நாட்டு வெடிகுண்டு வீசி ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழக டிஜிபி திரிபாதி தூத்துக்குடி வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பவரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முருகப்பெருமான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின்படி, காவல்துறையினர் இன்று (18.8.2020) மணக்கரை சந்திப்புக்கு விரைந்தனர்.
அப்போது, காவல்துறையினர் வருகையை அறிந்த துரை முத்து மற்றும் அவரது சகோதரன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். காவல் துறையினர் அவர்களைத் தூத்தி பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர் மீது வீசியாதாக தெரிகிறது. இதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்டுவிட்டர்.
இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள டிஜிபி திரிபாதி தூத்துக்குடி வரவுள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…